/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோக்கள் அணிவகுப்பு பேருந்தில் ஏற முடியாமல் பயணியர் பரிதவிப்பு

ADDED : நவ 07, 2024 01:25 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில், செங்கல்பட்டு நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் நின்று, பயணியரை ஏற்றி செல்கின்றன.
அதே போல், கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், கூடுவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணியரை ஏற்றிச் செல்வது வழக்கம்.
இந்த பேருந்து நிறுத்தத்தில், ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவில் ஒன்றன்பின் ஒன்றாக, பேருந்தில் ஏறும் பயணியருக்கும், இறங்கும் பயணியருக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, பயணி ஒருவர் கூறியதாவது:
தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, மாநகர மற்றும் அரசு பேருந்துகள் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திருச்சி, விழுப்புரம் செல்லும் அனைத்து பேருந்துகளும், கூடுவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.
இந்த பேருந்து நிறுத்தத்தில், சமீப காலமாக ஷேர் ஆட்டோக்களை பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, வரிசையாக நீண்ட நேரம் நிறுத்தி வைக்கின்றனர்.
இதுகுறித்து, கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, பயணியருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக, அணிவகுத்து நிற்கும் ஷேர் ஆட்டோக்களை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.