/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பட்டரவாக்கம் புதிய தார்ச்சாலை சில மாதத்தில் சேதமானதால் அதிர்ச்சி
/
பட்டரவாக்கம் புதிய தார்ச்சாலை சில மாதத்தில் சேதமானதால் அதிர்ச்சி
பட்டரவாக்கம் புதிய தார்ச்சாலை சில மாதத்தில் சேதமானதால் அதிர்ச்சி
பட்டரவாக்கம் புதிய தார்ச்சாலை சில மாதத்தில் சேதமானதால் அதிர்ச்சி
ADDED : ஜன 20, 2025 11:36 PM

மறைமலை நகர்,காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பட்டரவாக்கம் ஊராட்சியில், பட்டரவாக்கம் இலந்தோப்பு -- திருவடி சூலம் செல்லும் 2 கி.மீ., துார சாலை உள்ளது.
இந்த சாலையை பட்டரவாக்கம், தேனுார், கோவிலன்தாங்கல், குண்ணவாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக, ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது.
மேலும், வனப்பகுதியை ஒட்டி சாலை செல்வதால், வனத்துறை அனுமதி பெறுவதிலும் சிக்கல் இருந்தது.
பொது மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொடர் கோரிக்கைகளை ஏற்று இச்சாலை, முதல்வரின் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 77.18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடந்த சில மாதங்களுக்கு முன் தார்ச்சாலையாக அமைக்கப்பட்டது.
இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில், சாலையின் பல்வேறு இடங்களில் தார் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
புதிய சாலை அமைக்கப்பட்ட மகிழ்ச்சி, சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. தரமற்ற வகையில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சாலை வழியாக திருவடிசூலம் பகுதியிலுள்ள அம்மன் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் பேருந்துகள் சென்று வருவதால், சாலை கடுமையாக சேதமடைந்து உள்ளது.
இச்சாலையில் அதிக வளைவுகள் உள்ளதால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
எனவே, இந்த பகுதியில் பேருந்துகள் செல்ல தடை விதித்து, மாற்று பாதையில் திருப்பி விட வேண்டும். மேலும், சேதமடைந்துள்ள சாலையை மீண்டும் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

