/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கடைகள் உள்ளூர் வணிகர்களுக்கு ஒதுக்க எதிர்பார்ப்பு
/
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கடைகள் உள்ளூர் வணிகர்களுக்கு ஒதுக்க எதிர்பார்ப்பு
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கடைகள் உள்ளூர் வணிகர்களுக்கு ஒதுக்க எதிர்பார்ப்பு
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கடைகள் உள்ளூர் வணிகர்களுக்கு ஒதுக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 21, 2024 05:42 AM
கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், 100க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
பயணியரின் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள், தற்போது வரை போதுமான அளவில் திறக்கப்படவில்லை.
மேலும், இங்கு உள்ள கடைகள் அனைத்தும், பெரிய அளவிலான வணிகர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு வருவதாக, சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த உள்ளூர் வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, ஊரப்பாக்கத்தை சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், சாதாரண வியாபாரிகளுக்கும், சில்லறை வியாபாரிகளுக்கும் ஒதுக்கப்படவில்லை.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே அனைத்து கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்ட கடைகளும் தற்போது வரை திறக்கப்படவில்லை.
எனவே, ஊரப்பாக்கத்தை சேர்ந்த உள்ளூர் வணிகர்களுக்கும், சில்லறை விற்பனையில் ஈடுபடும் சிறு வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும்.
நிர்வாகம் நிர்ணயிக்கும் வாடகைத் தொகையை செலுத்துவதற்கு, உள்ளூர் வணிகர்கள் தயாராகவே உள்ளனர். ஆனால், அரசு நிர்ணயிக்கும் தொகைக்கு கடைகளை பெறும், பெரும்முதலாளிகள், அவற்றை சிறு வணிகர்களுக்கு கூடுதல் வாடகைக்கு விட காத்திருக்கின்றனர்.
இந்த முறைகேட்டை தடுத்து நிறுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கடைகளையும் உடனடியாக திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

