/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள் செங்கையில் போக்குவரத்து நெரிசல்
/
சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள் செங்கையில் போக்குவரத்து நெரிசல்
சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள் செங்கையில் போக்குவரத்து நெரிசல்
சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள் செங்கையில் போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 25, 2025 03:22 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள மேட்டுத்தெரு நுழைவாயில் பகுதியில், சாலையின் இருபுறமும் காய்கறி கடை, மளிகை கடை உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன.
இந்த சாலை வழியாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மருத்துவமனைக்குச் செல்வோர் என, அதிகமானோர் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றில் சென்று வருகின்றனர்.
போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையை கடைகள் ஆக்கிரமித்து உள்ளதால், வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், அத்தியாவசிய பணிக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, இந்த சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
ஆனால், இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த பிரச்னை தீர, சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற, மாவட்ட கலெக்டர் சினேகா நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

