/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போலீஸ் குடியிருப்பில் பழைய கட்டடங்கள்: இடித்து அப்புறப்படுத்த வேண்டுகோள்
/
போலீஸ் குடியிருப்பில் பழைய கட்டடங்கள்: இடித்து அப்புறப்படுத்த வேண்டுகோள்
போலீஸ் குடியிருப்பில் பழைய கட்டடங்கள்: இடித்து அப்புறப்படுத்த வேண்டுகோள்
போலீஸ் குடியிருப்பில் பழைய கட்டடங்கள்: இடித்து அப்புறப்படுத்த வேண்டுகோள்
ADDED : நவ 25, 2025 03:21 AM

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள, பழைய போலீஸ் குடியிருப்பில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுராந்தகத்தில், 1928-ம் ஆண்டு, மதுராந்தகம் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது.
இங்கு பணிபுரிந்த போலீசாருக்கு, மதுராந்தகம் ராமர் கோவில் இடப்பக்கம் செல்லும் ஜி.எஸ்.டி., சாலையோரம், போலீஸ் குடியிருப்பு அமைக்கப்பட்டது. பின், இந்த குடியிருப்பு பழுதடைந்ததால், 2002-ம் ஆண்டு புதிதாக, அதே பகுதியில் போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டது.
தற்போது, 27 ஆண்டுகளைக் கடந்தும், அந்த பழைய போலீஸ் குடியிருப்பில் உள்ள கட்டடங்கள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. இதனால் அந்த வளாகம், 'குடி'மகன்களின் கூடாரமாக மாறி உள்ளது.
மேலும், விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள், திருட்டு மணல் எடுத்துச் சென்று பிடிபட்ட மாட்டு வண்டிகள் உள்ளிட்டவை, இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதனால், இப்பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக, இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும், கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த பழைய போலீஸ் குடியிருப்பில் உள்ள கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

