/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலைநகர் ஸ்டேஷனில் எஸ்.ஐ., போன் 'ஆட்டை'
/
மறைமலைநகர் ஸ்டேஷனில் எஸ்.ஐ., போன் 'ஆட்டை'
ADDED : ஜன 08, 2025 07:45 PM
மறைமலை நகர்:மறைமலைநகர் பெரியார் சாலை சந்திப்பில், மறைமலைநகர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 6ம் தேதி, இந்த காவல் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர், போலீசாரிடம் சில தகவல்கள் கேட்பது போல கேட்டு விட்டு, வெளியே செல்லும் போது மேசை மீது இருந்த, சட்டம் -- ஒழுங்கு உதவி ஆய்வாளர் ஒருவரின் விலை உயர்ந்த மொபைல்போனை திருடிச் சென்று உள்ளார்.
அந்த நபர் சென்ற சிறிது நேரம் கழித்தே, மொபைல்போன் மாயமானது தெரிந்தது.
இதையடுத்து, அந்த மொபைல்போன் எண்ணின் இருப்பிடத்தை பார்த்த போது, பெருங்களத்துார் அருகில் இருப்பது தெரிந்தது. விரைந்து சென்று மொபைல் போனை மீட்ட போலீசார், மொபைல்போனை திருடிய வடமாநில இளைஞரை எச்சரித்து அனுப்பினர்.
புறநகர் பகுதிகளில் மொபைல்போன் பறிப்பு மற்றும் திருட்டு அதிகரித்து வரும் நிலையில், காவல் நிலையத்தில் இருந்தே மொபைல் போன் திருடப்பட்டது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.