/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி வண்டலுாரில் சிக்னல் இயங்காததால் அபாயம்
/
புகார் பெட்டி வண்டலுாரில் சிக்னல் இயங்காததால் அபாயம்
புகார் பெட்டி வண்டலுாரில் சிக்னல் இயங்காததால் அபாயம்
புகார் பெட்டி வண்டலுாரில் சிக்னல் இயங்காததால் அபாயம்
ADDED : டிச 09, 2024 11:59 PM
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சி, வண்டலுார் மேம்பாலத்தின் கீழ், போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்த சிக்னலில் தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி கேளம்பாக்கம், திருப்போரூர் செல்லும்.
வலதுபுறமாக மண்ணிவாக்கம், தாம்பரம் நோக்கி செல்லும். அதேபோல், செங்கல்பட்டில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறமாக திருப்போரூர் செல்வதற்கும், நேராக தாம்பரம், மண்ணிவாக்கம் செல்வதற்கும் சிக்னலில் நின்று செல்கின்றன.
கடந்த சில மாதங்களாக, இந்த சிக்னல் இயங்காததால், வாகனங்கள் தாறுமாறாக செல்வதுடன், சாலையை கடந்து செல்லும் கல்லுாரி மாணவர்கள், முதியவர்கள் வாகனங்கள் மீது மோதி, சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, பழுதான சிக்னலை சீரமைத்து, போக்குவரத்து போலீசாரை நியமித்து, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சென்று வர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.டேவிட், வண்டலுார்.