
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசாரத்தை மையப்படுத்தி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கு, மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம் குமரவேல், வெள்ளி வேல் பரிசு வழங்கினார். இதில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் ஆறுமுகம், மதுராந்தகம் நகர செயலர் சரவணன், ஒன்றிய குழு தலைவர் கீதா கார்த்திகேயன் மற்றும் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.