/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு புது கட்டடம் அமைக்க கோரிக்கை
/
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு புது கட்டடம் அமைக்க கோரிக்கை
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு புது கட்டடம் அமைக்க கோரிக்கை
சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு புது கட்டடம் அமைக்க கோரிக்கை
ADDED : மார் 21, 2025 01:58 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் சார் - பதிவாளர் அலுவலகம், கடந்த 1865 முதல் 3,256 சதுர அடி பரப்பரளவில் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திற்கு உட்பட்டு, 100 கிராமங்கள் உள்ளன.
அதில், மதுராந்தகம் தாலுகாவில் 95 கிராமங்கள், செய்யூர் தாலுகாவில் 5 கிராமங்கள் உள்ளன.
கருங்குழி பேரூராட்சி, மதுராந்தகம் நகராட்சி, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டடத்தில், சார் - பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
நிலம், வீட்டுமனை பத்திரப்பதிவு மற்றும் திருமண பதிவுகள் போன்றவை என, நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட பத்திர பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது, இந்த கட்டடம் மிகவும் பழமையானதால், மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறது.
ஒரு சில இடங்களில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, கீழே விழுகிறது.
அதனால், முக்கிய ஆவணங்களை பாதுகாப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது.
போதிய இடவசதி இல்லாததால், பதிவாளர் அலுவலகத்தில் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள், அமருவதற்கு போதிய இருக்கை வசதியின்றி வெளியில் காத்திருக்கின்றனர்.
இருசக்கர வாகனங்களை நிறுத்த இட வசதியும் இல்லை.
எனவே, தற்காலிகமாக சார் - பதிவாளர் அலுவலகத்தை மாற்று இடத்தில் அமைத்து, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் புதிய கட்டடம் அமைத்து தர, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.