/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காதலியை ஏமாற்றி தோழியை கரம்பிடித்த எஸ்.ஐ., மகன் கைது
/
காதலியை ஏமாற்றி தோழியை கரம்பிடித்த எஸ்.ஐ., மகன் கைது
காதலியை ஏமாற்றி தோழியை கரம்பிடித்த எஸ்.ஐ., மகன் கைது
காதலியை ஏமாற்றி தோழியை கரம்பிடித்த எஸ்.ஐ., மகன் கைது
ADDED : ஆக 27, 2025 11:55 PM
கொளத்துார், காதலியுடன் தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி விட்டு, அவரது தோழியை திருமணம் செய்த எஸ்.ஐ., மகன் கைது செய்யப்பட்டார்.
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணும், ஆவடியை சேர்ந்த நிஷாந்த், 29, என்பவரும் காதலித்து வந்தனர். வில்லிவாக்கத்தில் இரண்டு ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலே, தம்பதி போன்று 'லிவிங்டுகெதர்' வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். நிஷாந்தின் தந்தை, பட்டாபிராம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்.
இந்நிலையில், முறைப்படி தன்னை திருமணம் செய்ய மறுத்ததால், நிஷாந்த் மீது அவரது காதலி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்படி போலீசார் விசாரித்தனர். அப்போது, ஓராண்டில் திருமணம் செய்து கொள்வதாக நிஷாந்த் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் இம்மாதம் முதல் வாரத்தில், நிஷாந்த், புதுச்சேரியில் வைத்து காதலியின் தோழியை திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த நிஷாந்தின் காதலி, கொளத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், நேற்று முன்தினம் நிஷாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

