sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கிராமப்புற இளைஞர்களுக்கு வரும் 18ல் திறன் பயிற்சி

/

கிராமப்புற இளைஞர்களுக்கு வரும் 18ல் திறன் பயிற்சி

கிராமப்புற இளைஞர்களுக்கு வரும் 18ல் திறன் பயிற்சி

கிராமப்புற இளைஞர்களுக்கு வரும் 18ல் திறன் பயிற்சி


ADDED : அக் 15, 2025 10:13 PM

Google News

ADDED : அக் 15, 2025 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா' திட்டத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கு வரும் 18ம் தேதி, திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், 'தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா' திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட, கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

குறைந்தபட்சம் 3 முதல் 6 மாதங்கள் கொண்ட குறுகிய கால பயிற்சிகளில் உணவு, தங்குமிடவசதி, சீருடைகள், பயிற்சி உபகரணங்கள், கணினி பயிற்சியும் வழங்கப்படும்.

இந்த இலவச பயிற்சிக்குப் பின், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

விருப்பமுள்ள இளைஞர்கள் வரும் 18ம் தேதி காலை 9:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை, செங்கல்பட்டு மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடைபெறும், இளைஞர் திறன் திருவிழாவில் பங்கேற்கலாம்.

மேலும் விபரம் பெற அச்சிறுபாக்கம் - 95665 05051, மதுராந்தகம் - 96266 34105, சித்தாமூர் - 87782 40051, லத்துார் - 99768 60716, திருக்கழுக்குன்றம் - 98944 96522, திருப்போரூர் - 98425 34416, காட்டாங்கொளத்துார் - 82486 74283, புனிததோமையார்மலை - 96775 41910 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us