/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்டலம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
தண்டலம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : அக் 15, 2025 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சி, குருதேவா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்தில், மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.
கவி முரசு பாரதி பேரவை வழிகாட்டி குழு தலைவர் மணி, கண்காட்சியை துவக்கி வைத்தார்.
கண்காட்சியில் பள்ளி மாணவ - மாணவியர் சார்பில், 30க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன.
அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் மக்கள் பார்வையிட்டனர்.
கவிஞர் உதயா ஆதிமூலம், சமூக ஆர்வலர் ஆதிகுமரேசன் நடுவர்களாக இருந்து, சிறந்த படைப்புகளை தேர்வு செய்து பரிசு வழங்கினர். மாணவர்களின் அறிவியல் திறன்களை மேம்படுத்த கண்காட்சி நடந்தது.