/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறுகலான தெருக்களில் குப்பை சேகரிக்க ரூ.1.17 கோடியில் சிறிய ஜே.சி.பி., வாகனங்கள்

ADDED : அக் 30, 2024 06:57 PM
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில், குறுகலான தெருக்களில் குப்பை சேகரிக்க வசதியாக, 1.17 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, ஐந்து சிறிய ஜே.சி.பி., வாகனங்கள், பயன்பாட்டிற்கு நேற்று துவக்கி வைக்கப்பட்டன.
தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் குப்பை சேகரிக்கும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனம் முறையாக பணி செய்யாததால், எங்கு பார்த்தாலும் குப்பை கிடப்பதாக, தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். குறுகலான தெருக்களில், ஜே.சி.பி., வாகனங்கள் செல்ல முடியாததால் குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்படுகிறது.
இதனால், 1.17 கோடி ரூபாய் செலவில், ஐந்து சிறிய ஜே.சி.பி., வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள், நேற்று, பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், மேயர் வசந்தகுமாரி, கமிஷனர் பாலச்சந்தர், மண்டல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு மண்டலத்திற்கு ஒரு வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் குறுகலான தெருக்களில் சென்று குப்பை சேகரிப்பு மற்றும் சாலையோர மண் குவில்களை அகற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.