/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறு உற்பத்தி நிறுவனங்கள் கடன் உதவி பெற அழைப்பு
/
குறு உற்பத்தி நிறுவனங்கள் கடன் உதவி பெற அழைப்பு
ADDED : நவ 17, 2024 09:53 PM
செங்கல்பட்டு:தாய்கோ வங்கி கிளையில், கலைஞர் கடன் உதவி திட்டத்தில் கடன்பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி கிளைகள் உள்ளன.
இந்த வங்கிகளில், குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு, 7 சதவீதம் வட்டியில், 20 லட்சம் ரூபாய் வரை நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கும் புதிய திட்டமான கடன் உதவி திட்டத்தின் கீழ், அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வழங்கப்பட உள்ளது.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட தொழில் மைய மேலாளர், செங்கல்பட்டு, தாம்பரம் தாய்கோ வங்கி கிளை மேலாளர்கள் மற்றும் தொலைபேசி எண்கள்: 98426 60649, 044 - 4856 7536 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.