/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு
/
வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு
ADDED : டிச 08, 2024 08:20 PM
மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி, காந்திநகர் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது வீட்டின் உள்ளே, நேற்று முன்தினம் பாம்பு ஒன்று புகுந்தது. இதைப் பார்த்த குடும்பத்தினர், அலறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே ஓடினர்.
உடனே சந்திரபாபு, இதுகுறித்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பை தேடினர்.
அப்போது, கதவுக்குப் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த செங்கற்களுக்கு அடியில், நான்கு அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு பதுங்கி இருந்தது.
அதை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள், மறைமலைநகர் பகுதியிலுள்ள வனப்பகுதியில் அதை விடுவித்தனர்.