/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'யு - டியூபர்' வராகி மீது இதுவரை 40 புகார் பதிவு
/
'யு - டியூபர்' வராகி மீது இதுவரை 40 புகார் பதிவு
ADDED : செப் 25, 2024 05:54 AM

சென்னை : விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற வராகி, 50; யு - டியூபர். இவர், கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் வைத்தியலிங்கம், 46, என்பவரை, பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
அவர் அளித்த புகாரின்படி, போலீசார் வராகியை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணையில், 'திடுக்' தகவல்கள் வெளியாயின.
இதையடுத்து, வராகியால் பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் காவல் துறை வெளியிட்டது.
அரசு மருத்துவமனை டீன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உட்பட 40 பேரை மிரட்டி பணம் பறித்தல், பண மோசடி, ரவுடிசம் என வராகி மீது புகார் அளித்துள்ளனர். பதிவான புகார்கள் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
வராகியால் பாதிக்கப்பட்டவர்கள், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை, 044 2345 2324 - 352 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.