/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
/
கடப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கடப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கடப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ADDED : ஆக 25, 2025 11:04 PM
செய்யூர், கடப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆலம்பரைக்குப்பம், வேம்பனுார், கப்பிவாக்கம், கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில், 4,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அதிக மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் சமுதாய நலக்கூடம் இல்லாததால், இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது குடும்பங்களின் சுப நிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் அதிக கட்டணம் கொடுத்து நடத்தி வருகின்றனர். இதனால், கடப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தனியார் திருமண மண்டபங்களில் வாடகை 20,000 முதல் 50,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இதனால், ஏழை மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் நடத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், இப்பகுதி மக்களின் நலன் கருதி, கடப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்து செல்ல போக்குவரத்து வசதி உள்ளதால், கடப்பாக்கம் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைப்பது வசதியாக இருக்கும். அதன் மூலமாக பேரூராட்சி நிர்வாகத்திற்கும் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.