/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தீயணைப்பு நிலையம் கட்ட செய்யூரில் மண் பரிசோதனை
/
தீயணைப்பு நிலையம் கட்ட செய்யூரில் மண் பரிசோதனை
ADDED : செப் 25, 2024 12:09 AM

செய்யூர்:செய்யூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே, 10 ஆண்டுகளாக தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. துவக்கத்தில், தற்காலிகமாக குளக்கரை அருகே சிறிய கட்டடம் கட்டப்பட்டு, தீயணைப்பு நிலையம் துவங்கப்பட்டது.
தற்போது, போதிய இடவசதி இல்லாமல், தீயணைப்பு துறை அதிகாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால், புதிய கட்டடம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, செய்யூர் - சித்தாமூர் சாலை ஓரத்தில், 50 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்பகுதியில், பொதுப்பணித்துறை சார்பாக, 5,193 சதுர அடி பரப்பளவில், 2.41 கோடி ரூபாய் மதிப்பிட்டில், புதிய கட்டடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, கட்டடம் கட்டுவதற்கான மண் பரிசோதனை நடத்தப்பட்டது.