/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 3 அரசு பள்ளிக்கு 'சோலார்' மின்சாரம் வசதி
/
செங்கையில் 3 அரசு பள்ளிக்கு 'சோலார்' மின்சாரம் வசதி
செங்கையில் 3 அரசு பள்ளிக்கு 'சோலார்' மின்சாரம் வசதி
செங்கையில் 3 அரசு பள்ளிக்கு 'சோலார்' மின்சாரம் வசதி
ADDED : மார் 20, 2025 09:04 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், தனியார் நிறுவனம் சார்பில், மூன்று அரசு பள்ளிகளுக்கு, சூரிய ஒளி ஆற்றல் வாயிலாக மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், அனுமந்தபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் செங்கல்பட்டு அறிஞர் அண்ணா நகராட்சி மேல்நிலைப் பள்ளி, பெருங்களத்துார் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, தனியார் நிறுவனம் மற்றும் தன்னார்வ அமைப்புகள், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகள் வழங்கின.
இதன் துவக்க விழா, அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் பிரிமிளா தலைமையில், நேற்று நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், தனியார் நிறுவனம் மற்றும் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேற்கண்ட பள்ளிகளுக்கு தேவையான வகுப்பறையில் மின் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் அலுவலகத்தில் கணினிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்திற்கும், சூரிய ஒளி ஆற்றல் வாயிலாக, மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, மாணவர்கள் தடையின்றி மின்சார வசதி பெற்று கற்றல், கற்பித்தல் பணி நடைபெற உதவிகரமாக இருக்கும். மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
சுற்றுச்சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த வேண்டும் என, தனியார் நிறுவனத்திடம் பள்ளி தலைமையாசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.