/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை புத்தக திருவிழாவில் ரூ.65 லட்சத்திற்கு விற்பனை
/
செங்கை புத்தக திருவிழாவில் ரூ.65 லட்சத்திற்கு விற்பனை
செங்கை புத்தக திருவிழாவில் ரூ.65 லட்சத்திற்கு விற்பனை
செங்கை புத்தக திருவிழாவில் ரூ.65 லட்சத்திற்கு விற்பனை
ADDED : ஜன 05, 2024 11:17 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து, ஐந்தாவது ஆண்டாக புத்தாக திருவிழா நடத்தியது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகில் உள்ள அலிசன்காசி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், கடந்த டிச., 28 துவங்கி, 4ம் தேதி வரை நடைபெற்றது.
புத்தக கண்காட்சியில், 80 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதில், தினமலர் நாளிதழ் உள்ளிட்ட 60 அரங்குகளில், லட்சக்கணக்கான நுால்கள் இடம் பெற்றன.
இதில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 20,000 பேரும், பொதுமக்கள் 10,000பேர் என, 30,000 பேர் பங்கேற்றனர். கட்டுரை, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 198 மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
எட்டு நாள் புத்தக திருவிழாவில், 65 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப் பட்டு உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, எட்டாம் நாள் விழா, கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், கடந்த 4ம் தேதி நடந்தது. இதில், முன்னாள் தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்ட பலர் பேசினர்.
மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சப் -- கலெக்டர் நாராயணசர்மா, தாசில்தார் தனலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.