/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தென்மண்டல குத்துச்சண்டை யோகாசன போட்டி துவக்கம்
/
தென்மண்டல குத்துச்சண்டை யோகாசன போட்டி துவக்கம்
ADDED : செப் 22, 2024 05:36 AM

செங்கல்பட்டு: நென்மேலி ஸ்ரீ கோகுலம் பொதுப்பள்ளியில், தென்மண்டல அளவிலானசி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே, குத்துச்சண்டை, யோகாசன போட்டி, நேற்று துவங்கியது.
செங்கல்பட்டு அடுத்த நென்மேலியில், ஸ்ரீகோகுலம் பொதுப்பள்ளியில், தென்மண்டல அளவிலான சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி மற்றும் யோகாசனபோட்டிகள், கோகுலம் சபரிஹாலில், நேற்றுநடந்தது.
தென்னக ரயில்வே விளையாட்டு துறை அதிகாரியும், ஒலிம்பிக் போட்டியாளருமான வெங்கடேசன் தேவராஜன், யோகா குருயோகி டாக்டர்கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று, போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இந்த போட்டியில் தமிழ்நாடு, தெலுங்கானா, புதுச்சேரி, விஜயவாடா, அந்தமான் மற்றும் நிகோபார் ஆகிய மண்டங்களில் இருந்து, 3,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதன் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று நடக்கிறது.