/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மகளிருக்கான மாவட்ட வாலிபால் தெற்கு ரயில்வே அணி 'சாம்பியன்'
/
மகளிருக்கான மாவட்ட வாலிபால் தெற்கு ரயில்வே அணி 'சாம்பியன்'
மகளிருக்கான மாவட்ட வாலிபால் தெற்கு ரயில்வே அணி 'சாம்பியன்'
மகளிருக்கான மாவட்ட வாலிபால் தெற்கு ரயில்வே அணி 'சாம்பியன்'
ADDED : செப் 16, 2025 12:04 AM

சென்னை;மகளிருக்கான மாவட்ட வாலிபால் தொடரின் இறுதிப்போட்டியில், விறுவிறுப்பான ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி., அணியை வீழ்த்தி, தெற்கு ரயில்வே அணி 'சாம்பியன்' கோப்பையை வென்றது.
ஜி.பி.ஆர்., மெட்டல்ஸ், ரோமா குரூப் ஆதரவில், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், ஆடவருக்கான மாவட்ட 'பி' டிவிஷன் வாலிபால் போட்டி மற்றும் மகளிருக்கான மாவட்ட வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடந்தன. போட்டியில், ஆடவரில் 25 அணிகளும், மகளிரில் 12 அணிகளும் பங்கேற்று விளையாடின.
இதில், மகளிருக்கான இறுதி போட்டியில், தெற்கு ரயில்வே அணி 24 - 22, 26 - 24, 25 - 19 என்ற புள்ளிக்கணக்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமான எஸ்.டி.ஏ.டி., அணியை தோற்கடித்து, சாம்பியன் கோப்பையை வென்றது.
மூன்றாம் இடத்திற்கான போட்டியில், சிவந்தி கிளப் அணி, 25 - 6, 25 - 12 என்ற கணக்கில் கிறிஸ்டியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியை தோற்கடித்தது.
ஜி.எஸ்.டி., அணி அபாரம் ஆடவருக்கான இறுதிப்போட்டியில், எஸ்.ஆர்.எம்., அகாடமி மற்றும் ஜி.எஸ்.டி., அணிகள், நேற்று மாலை மோதின.
விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் இரண்டு செட்களில், இரு அணிகளும் 25 - 19, 19 - 25 தலா ஒரு செட்டை கைப்பற்றின.
இதையடுத்து ஆட்டம் சூடுபிடித்தது. மூன்றாவது செட்டில் 'வெற்றி மதில்மேல் பூனை' என்பது போல இருந்தது.
அனல் பறந்த ஆட்டத்தை 27 - 25 என்ற கணக்கில் ஜி.எஸ்.டி., அணி கைப்பற்றியது. இதையடுத்து, ஆட்டம் நான்காவது செட்டிற்கு செல்ல, அந்த செட்டையும் 25 - 21 என்ற கணக்கில் ஜி.எஸ்.டி., அணி கைப்பற்றி, 'சாம்பியன்' கோப்பையை தட்டிச் சென்றது.
மூன்றாவது இடத்திற்கான போட்டியில், லயோலா கல்லுாரி அணி, 25 - 19, 22 - 25, 25 - 19 என்ற கணக்கில் எஸ்.டி.ஏ.டி.,யை வீழ்த்தி கைப்பற்றியது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, வருமான வரித்துறையின் கமிஷனர் பாண்டியன், ஜி.ஆர்.பி., மெட்டல்ஸ் நிறுவன இயக்குநர் வெங்கடேஷ் ரதி, ரோமோ குரூப் ராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.