sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஐ.ஐ.டி.,யில் தென்மாநில கூடைப்பந்து எம்.சி.சி., - இந்துஸ்தான் 'சாம்பியன்'

/

ஐ.ஐ.டி.,யில் தென்மாநில கூடைப்பந்து எம்.சி.சி., - இந்துஸ்தான் 'சாம்பியன்'

ஐ.ஐ.டி.,யில் தென்மாநில கூடைப்பந்து எம்.சி.சி., - இந்துஸ்தான் 'சாம்பியன்'

ஐ.ஐ.டி.,யில் தென்மாநில கூடைப்பந்து எம்.சி.சி., - இந்துஸ்தான் 'சாம்பியன்'


ADDED : மார் 08, 2024 11:07 PM

Google News

ADDED : மார் 08, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கிண்டியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., எனும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் சார்பில், தென்மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், ஆடவர் வாலிபாலில் லயோலா, ஐ.ஐ.டி., - பனிமலர், ஜமால் கல்லுாரி உள்ளிட்ட எட்டு அணிகளும், பெண்களில் ஐந்து அணிகளும் பங்கேற்றுள்ளன.

அதேபோல், கூடைப்பந்து போட்டியிலும் ஆடவரில் எட்டு அணிகளும், பெண்களில் ஐந்து அணிகளும் பங்கேற்றுள்ளன. ஆடவரில், 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையிலும், பெண்களில் 'லீக்' முறையிலும் போட்டிகள் நடக்கின்றன.

கூடைப்பந்தில் அனைத்து சுற்றுகள் முடிவில், இறுதிப் போட்டியில் ஆடவரில் எம்.சி.சி., - எஸ்.ஆர்.எம்., அணிகள் மோதின.

இதில், 72 - 58 என்ற கணக்கில் எம்.சி.சி., அணி வெற்றி பெற்று, முதலிடத்தைப் பிடித்தது. ஜே.ஐ.டி., - ஜமால் அகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களை வென்றன.

பெண்களில், இந்துஸ்தான் மற்றும் எம்.ஓ.பி., வைஷ்ணவ் கல்லுாரிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 86 - 85 என்ற கணக்கில், இந்துஸ்தான் அணி வெற்றி பெற்றது.

வேல்ஸ் மற்றும் ஜே.ஐ.டி., அணிகள் மூன்று மற்றும் நான்காம் இடங்களை வென்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு, ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பரிசுகளை வழங்கினார்.






      Dinamalar
      Follow us