/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்று திறனாளிகள் சிறப்பு முகாம்
/
மாற்று திறனாளிகள் சிறப்பு முகாம்
ADDED : செப் 27, 2024 07:50 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்,நடந்தது.
தமிழக அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மதுராந்தகம் வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை, கல்விக்கடன், பஸ் பாஸ், தனியார் துறையில் வேலை வாய்ப்பு, மாதாந்திர உதவி தொகை, ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்ற பல்வேறு ஆவணங்களை பெற, நேற்று சிறப்பு முகாம் நடந்தது.
இம்முகாமினை, வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் துவக்கி வைத்தார். இதில், மதுராந்தகம் வட்டாரத்தைச் சேர்ந்த, 54 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன் பெற்றனர்.