/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாயிகளுக்கு தனி எண் வழங்க சிறப்பு முகாம்
/
விவசாயிகளுக்கு தனி எண் வழங்க சிறப்பு முகாம்
ADDED : பிப் 12, 2025 12:27 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற, விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பிரேம்சாந்தி அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், மின்னணு முறையில், அனைத்து விவசாயிகளின் தரவு சேகரிக்கப்படுகிறது. ஆதார் போன்று விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்பட உள்ளது.
இதனால், இனிவரும் காலங்களில், அனைத்து அரசு திட்ட உதவிகளும், விவசாயிகளின் தரவு தளத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.
நில விபரங்களை இணைப்பதன் வாயிலாக, அனைத்து துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம்.
இப்பணி மேற்கொள்ள சிறப்பு முகாம்கள், கிராம அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் வேளாண்மை துறை உள்ளிட்ட துறை பணியாளர்கள் இணைந்து, விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொள்வர்.
விவசாயிகள், தங்களுடைய பட்டா, சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை, முகாமில் பதிவு செய்து பயனடையலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.