/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணி
/
செங்கையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணி
ADDED : நவ 03, 2025 10:37 PM

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணி தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்களின் ஆலோசனை கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் கியூரி தலைமையில், திம்மாவரத்தில் நேற்று நடந்தது.
இதில், தாசில்தார் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், 'வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்களை ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், இன்று துவங்கி, வரும் டிச., 4ம் தேதி வரை, வீடு வீடாகச் சென்று வழங்குகின்றனர்.
இப்பணிக்கு, அரசியல் கட்சி முகவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, வருவாய்த்துறை தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

