/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாக்காளர் சிறப்பு முகாம் இன்று, நாளை நடக்கிறது
/
வாக்காளர் சிறப்பு முகாம் இன்று, நாளை நடக்கிறது
ADDED : ஜன 03, 2026 05:37 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில், வாக்காளர் சிறப்பு முகாம், இன்றும் நாளையும் நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், கடந்த 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகின்றன.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர், அதற்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். மேலும், வாக்காளர்கள் நேரடியாகவும், இந்திய தேர்தல் கமிஷனின் https;//voters,eci.gov.in என்ற இணைய வழி மற்றும் Voters Help Line என்ற மொபைல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகம் இருந்தால், கட்டணமில்லா தொலைபேசி எண் 044- 1950ல் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேற்படி இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புவோர், அதற்கான விண்ணப்பங்களை அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கும் சிறப்பு முகாமில் அளிக்கலாம்.
இன்றும் நாளையும், காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
'முகாமில் அளிக்கப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்., 17ம் தேதி வெளியிடப்படும்' என, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான சினேகா தெரிவித்துள்ளார்.

