/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முடிச்சூரில் கோவில் உண்டியல்கள் திருட்டு
/
முடிச்சூரில் கோவில் உண்டியல்கள் திருட்டு
ADDED : ஜன 03, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முடிச்சூர்: தாம்பரம் அடுத்த முடிச்சூர், மதனபுரத்தில் நாகவல்லி அம்மன் கோவில் உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன்தினம், சிறப்பு வழிபாடு நடந்தது.
தரிசனம் முடிந்த பிறகு, இரவு, 11:30 மணிக்கு கோவில் நடை பூட்டப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறந்த போது, கோவிலின் மூன்று உண்டியல்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. திருடப்பட்ட உண்டியல்களில் 40,000 ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

