/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 23ல் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
/
செங்கையில் 23ல் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
ADDED : ஜன 12, 2025 08:36 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, வரும் 23ம் தேதி பல்வேறு போட்டிகள் நடக்கின்றன.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பிளஸ் 1, பிளஸ் 2 பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், வரும் 23ம் தேதி, செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாயில், காலை 9:00 மணிக்கு நடக்கின்றன.
இப்போட்டியில் பங்கேற்க, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பள்ளி தலைமையாசிரியரிடமும், கல்லுாரி மாணவர்கள் தங்கள் கல்லுாரி முதல்வரிடமும் பரிந்துரை பெற்று பங்கேற்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.