/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கரும்பாக்கம் சாலை வளைவில் ஏற்படும் விபத்தை தடுக்க வேகத்தடுப்பு அவசியம்
/
கரும்பாக்கம் சாலை வளைவில் ஏற்படும் விபத்தை தடுக்க வேகத்தடுப்பு அவசியம்
கரும்பாக்கம் சாலை வளைவில் ஏற்படும் விபத்தை தடுக்க வேகத்தடுப்பு அவசியம்
கரும்பாக்கம் சாலை வளைவில் ஏற்படும் விபத்தை தடுக்க வேகத்தடுப்பு அவசியம்
ADDED : மே 03, 2025 10:54 PM
திருப்போரூர்:கரும்பாக்கத்தில் அபாயகரமான வளைவில் வேகத்தடுப்பு மற்றும் எச்சரிக்கை சிக்னல் அமைத்து, விபத்து அபாயத்தை தடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை, 27 கி.மீ., உள்ளது. இரு வழிப்பாதையாக இருந்த இச்சாலை, 117 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இச்சாலை இடையே கரும்பாக்கம் பகுதி உள்ளது. இப்பகுதி பேருந்து நிறுத்தம் அருகே அரசு பள்ளி, வணிக கடைகள், தேவாலயம், குடியிருப்பு வீடுகள் உள்ளன.
இங்கு, அபாயகரமான வளைவுகள் உள்ளன. இங்கு எந்த ஒரு வேக தடுப்பு, எச்சரிக்கை சிக்னல் போன்ற பாதுகாப்பு வசதியும் இல்லை. இதனால் இந்த வளைவு பகுதியில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்று காலை, வளைவு பகுதியில் அரசு பேருந்தும், தனியார் வேனும் லேசாக உரசியதில் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடி மட்டும் உடைந்தது.
இதனால் பேருந்து ஓட்டுநர், வேன் ஓட்டுநருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அங்கு சிறிது நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
எனவே, கரும்பாக்கத்தில் உள்ள சாலை வளைவு பகுதிகளில், வேகத்தடுப்பு மற்றும் எச்சரிக்கை சிக்னல், பலகை அமைத்து, விபத்துகள் எற்படாமல் தடுக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.