/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு
/
நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு
நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு
நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு
ADDED : ஏப் 05, 2025 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கபெருமாள்கோவில்:சிங்கபெருமாள்கோவில் - அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவில் வளாகத்தில் நேற்று காலை, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் சிங்கபெருமாள்கோவில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோவிலுக்கு வந்த பக்தர்கள், ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.