/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓட்டேரி அரசு பள்ளியில் விளையாட்டு போட்டிகள்
/
ஓட்டேரி அரசு பள்ளியில் விளையாட்டு போட்டிகள்
ADDED : பிப் 11, 2025 06:53 PM
வண்டலூர்:வண்டலுார், ஓட்டேரி அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று, ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி விரிவு பகுதியில், அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில், 775 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில், பள்ளியின் ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
ஓட்டப்பந்தயம், கபடி, வாலிபால், டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ், பதக்கம், கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன.