sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விளையாட்டு செய்திகள் மாநில கூடைப்பந்து போட்டி 8 அணிகள் 'லீக்' சுற்றுக்கு தகுதி

/

விளையாட்டு செய்திகள் மாநில கூடைப்பந்து போட்டி 8 அணிகள் 'லீக்' சுற்றுக்கு தகுதி

விளையாட்டு செய்திகள் மாநில கூடைப்பந்து போட்டி 8 அணிகள் 'லீக்' சுற்றுக்கு தகுதி

விளையாட்டு செய்திகள் மாநில கூடைப்பந்து போட்டி 8 அணிகள் 'லீக்' சுற்றுக்கு தகுதி


ADDED : ஏப் 29, 2025 12:36 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஏப். 29-

மயிலாப்பூரில் உள்ள ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில், 19ம் ஆண்டாக மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்து வருகிறது.

'நாக் அவுட்' போட்டிகள், பெரியமேடு, நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்தன. இதில், ஐ.சி.எப்., - இந்தியன் வங்கி, வருமான வரி, ரைசிங் ஸ்டார் உட்பட ஆண்களில் 72, பெண்களில் 32 என, மொத்தம் 104 அணிகள் பங்கேற்றுள்ளன.

பெண்களுக்கான போட்டியில், தமிழக போலீஸ் அணி 55 - 28 என்ற கணக்கில், பீனிக்ஸ் இந்தியாவையும்; ரைசிங் ஸ்டார், 81 - 16 என்ற கணக்கில் ஐ.சி.எப்., காலனியையும்; வருமான வரி, 63 - 44 என்ற கணக்கில், ஓசியானிக் கிளப்பையும் தோற்கடித்தன.

ஆண்களில் இந்தியன் வங்கி அணி, 97 - 70 என்ற கணக்கில் அரைஸ் அணியையும், வருமான வரி அணி 102 - 72 என்ற கணக்கில் வி.கே.ஜெயராமன் அணியையும் வீழ்த்தின.

அனைத்து 'நாக் அவுட்' போட்டிகள் முடிவில், பெண்களில் ரைசிங் ஸ்டார்ஸ், வருமான வரி அணி, எஸ்.டி.ஏ.டி., - தமிழக போலீஸ்; ஆண்களில் இந்தியன் வங்கி, வருமான வரி அணி, எஸ்.டி.ஏ.டி., - ஐ.சி.எப்., ஆகிய எட்டு அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன.

'லீக்' போட்டிகள், தி.நகரில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us