/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தென் மண்டல செஸ் போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி
/
தென் மண்டல செஸ் போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி
தென் மண்டல செஸ் போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி
தென் மண்டல செஸ் போட்டி எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி
ADDED : ஜன 12, 2025 02:19 AM

சென்னை,வேல் டெக் பல்கலை சார்பில், தென் மண்டல பல்கலைகளுக்கு இடையில் ஆண்களுக்கான செஸ் போட்டி, ஆவடியில் உள்ள பல்கலை வளாகத்தில், கடந்த 8ம் தேதி துவங்கி நேற்று காலை நிறைவடைந்தது.
மொத்தம் ஏழு சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், எஸ்.ஆர்.எம்., பல்கலை 4 - 0 என்ற கணக்கில் கர்நாடகா பல்கலை; 3 - 1 என்ற கணக்கில் பாரதியார் பல்கலைகளை வீழ்த்தியது. தொடர்ந்து, 4 - 0 என்ற கணக்கில் சென்னை பல்கலை அணியையும், 3 - 1 என்ற கணக்கில் அண்ணா பல்கலை அணியையும் தோற்கடித்தது.
அனைத்து சுற்றுகள் முடிவில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை, 24.5 புள்ளிகள் பெற்று, முதலிடத்தை பிடித்தது. ஜேப்பியார் பல்கலை, 21.5 புள்ளிகளில் இரண்டாமிடத்தையும், ஆந்திராவின் கே.எல்.இ.எப்., பல்கலை மூன்றாம் இடத்தையும், அண்ணா பல்கலை நான்காம் இடத்தையும் கைப்பற்றின.
போட்டியில், முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள், அகில இந்திய போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளன.