/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 23, 2024 04:55 AM

மறைமலை நகர் : மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லுாரியின் 19வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமங்களின் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லுாரியின் தாளாளர் ஹரிணி, எஸ்.ஆர்.எம். குழுமங்களின் கல்வியியல் இயக்குனர் ராமச்சந்திரன் ஆகியோர் பட்டம் பெற்ற மாணவ -- மாணவியரை வாழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், 610 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், அண்ணா பல்கலை மற்றும் கல்லுாரியின் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 44 மாணவர்களின் சாதனைகளை பாராட்டி, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.