/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில அளவிலான கைப்பந்து போட்டி செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி 'சாம்பியன்'
/
மாநில அளவிலான கைப்பந்து போட்டி செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி 'சாம்பியன்'
மாநில அளவிலான கைப்பந்து போட்டி செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி 'சாம்பியன்'
மாநில அளவிலான கைப்பந்து போட்டி செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி 'சாம்பியன்'
ADDED : ஜூலை 28, 2025 11:46 PM

சென்னை, மாநில அளவில் நடந்த கைப்பந்து போட்டியில், செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
யுனைடெட் வாலிபால் அகாடமி மற்றும் ஆலந்துார் செயின்ட் மான்போர்ட் மேல்நிலைப் பள்ளி இணைந்து, மாநில அளவில் பள்ளி அணிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியை நடத்தின. இதில், 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இதில், அரையிறுதி போட்டியில் நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி அணி, 25 -- 22, 25 -- 19 என்ற நேர் செட் கணக்கில், ஆலந்துார் மான்போர்ட் மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி அணி, 25 - -15, 25 - -16 என்ற நேர் செட் கணக்கில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி அணியும் நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இதில், 25 -- 17, 25 -- 13 என்ற நேர் செட் கணக்கில், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்கத் தலைவர் அழகேசன், சைன் மான்போர்ட் மேல்நிலைப் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் அருட் சகோதரர் அலெக்ஸ், யுனைடெட் வாலிபால் அகாடமி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.