/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுக்கூட ஊழியருக்கு கத்திக்குத்து
/
மதுக்கூட ஊழியருக்கு கத்திக்குத்து
ADDED : ஜன 22, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிக்கரணை, பள்ளிக்கரணையில், மதுக்கூட ஊழியர் தலையில் கத்தியால் குத்தி தப்பிச் சென்ற மர்ம நபர்கள் இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பகவதி மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, 34. இவர், பள்ளிக்கரணை, ராம்நகர், 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு ராஜா வெளியே வந்துள்ளார்.
அப்போது, ஆட்டோவில் காத்திருந்த இரு நபர்கள், திடீரென ராஜாவின் தலையில் கத்தியால் குத்தி தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த ராஜா, அருகே இருந்த காமாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பள்ளிகரணை போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.