/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவுநீர் கலந்த மழைநீர் தேக்கம் கிழக்கு தாம்பரத்தில் தொற்று அபாயம்
/
கழிவுநீர் கலந்த மழைநீர் தேக்கம் கிழக்கு தாம்பரத்தில் தொற்று அபாயம்
கழிவுநீர் கலந்த மழைநீர் தேக்கம் கிழக்கு தாம்பரத்தில் தொற்று அபாயம்
கழிவுநீர் கலந்த மழைநீர் தேக்கம் கிழக்கு தாம்பரத்தில் தொற்று அபாயம்
ADDED : டிச 16, 2024 04:27 AM
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி, ஐந்தாவது மண்டலம், 63வது வார்டு, கிழக்கு தாம்பரத்தில் பாரதியார் தெரு உள்ளது. இப்பகுதியில் முறையான மழைநீர் கால்வாய் இல்லை. இதனால், மழைக் காலத்தில் தெருவில் தேங்கும் மழைநீர், அருகேயுள்ள ஏரிக்கு செல்லும்.
இந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையில், இந்த ஏரி நிரம்பி, பாரதியார் தெரு மற்றும் ஏரியை ஒட்டியுள்ள தெருக்களில் முழங்கால் அளவிற்கு கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளது. 10 நாட்களுக்கு மேல் தேங்கியுள்ளதால், அத்தெரு மக்கள், வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கின்றனர்.
மேலும், தோல் அரிப்பு, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் பரவி வருகின்றன. இவ்வளவு பிரச்னை நீடித்தும், மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதியை எட்டிக்கூட பார்க்கவில்லை என,பகுதிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, மாநகராட்சி கமிஷனர் நேரிடையாக ஆய்வு செய்து, கழிவுநீர் கலந்த மழைநீரை அகற்றி, அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி, தோல் அரிப்பு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஐந்தாவது மண்டல உதவி செயற் பொறியாளர் குமாரிடம் கேட்டபோது, ''பாரதியார் உள்ளிட்ட தெருக்களில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கியுள்ளது தொடர்பாக, இதுவரை எந்த புகாரும் வரவில்லை,'' என, அலட்சியமாக பதில் கூறினார்.

