/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'உங்களுடன் ஸ்டாலின்' திருப்போரூரில் முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திருப்போரூரில் முகாம்
ADDED : ஜூலை 30, 2025 11:33 PM

திருப்போரூர்:திருப்போரூரில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி பகுதியில்,'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம், பேரூராட்சித் தலைவர் தேவராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
முகாமில் மகளிர் உரிமைத் தொகை, ஆதார் சேவை, இலவச வீட்டு மனை பட்டா, மின் இணைப்பு, குடும்ப அட்டை, வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பெறும் வகையில், பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தன.
இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, முகாமை பார்வையிட்டார்.
தொடர்ந்து, கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் பெட்டகம், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த விண்ணப்பதாரருக்கு மின் அளவீடு கருவி உள்ளிட்டவற்றை அமைச்சர் வழங்கினார்.