/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடப்பாக்கத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
/
கடப்பாக்கத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
கடப்பாக்கத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
கடப்பாக்கத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
ADDED : செப் 21, 2025 01:21 AM
செய்யூர்:கடப்பாக்கத்தில் நேற்று நடந்த 'நலன் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமை செங்கல்பட்டு கலெக்டர் சினேகா ஆய்வு செய்தார்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
செங்கல்பட்டு கலெக்டர் சினேகா ஆய்வு செய்து, முகாமில் அளிக்கப்படும் சேவைகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
முகாமில், இ.சி.ஜி., மகப்பேறு ,கண், பொதுமருத்துவம், பல் பரிசோதனை, எலும்பு, நரம்பியல், ரத்த பரிசோதனை, காசநோய் உள்ளிட்ட பல்வேறு விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
முகாமில் 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.