/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடலுார் குளத்தை சுற்றி தடுப்பு அமைக்கும் பணிகள் துவக்கம்
/
கூடலுார் குளத்தை சுற்றி தடுப்பு அமைக்கும் பணிகள் துவக்கம்
கூடலுார் குளத்தை சுற்றி தடுப்பு அமைக்கும் பணிகள் துவக்கம்
கூடலுார் குளத்தை சுற்றி தடுப்பு அமைக்கும் பணிகள் துவக்கம்
ADDED : பிப் 20, 2025 11:48 PM

மறைமலைநகர், மறைமலைநகர் நகராட்சி 10வது வார்டு, கூடலுார் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி அருகில், குடியிருப்புகள் சுற்றியுள்ள பகுதியில் குளம் உள்ளது.
இந்த குளம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் துார் வாரப்பட்டு, சுற்றி கரைகள் பலப்படுத்தப்பட்டன.
ஆனால், குளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்கப்படாததால், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவானது. கடந்த ஆண்டு இரண்டு குழந்தைகள் தண்ணீரில் மூழ்கின.
கடந்த 6ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வந்த்,8, என்ற குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது.
நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகவும், தடுப்பு வேலி அமைக்காததே காரணம் எனவும் குழந்தையின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தற்போது, நகராட்சி சார்பில் குளத்தைச் சுற்றி, இரும்பு கம்பங்கள் அமைத்து சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளது.