/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில ஜூனியர் தடகள போட்டி திருவள்ளூர் அணி 'சாம்பியன்'
/
மாநில ஜூனியர் தடகள போட்டி திருவள்ளூர் அணி 'சாம்பியன்'
மாநில ஜூனியர் தடகள போட்டி திருவள்ளூர் அணி 'சாம்பியன்'
மாநில ஜூனியர் தடகள போட்டி திருவள்ளூர் அணி 'சாம்பியன்'
ADDED : பிப் 15, 2025 12:49 AM

சென்னை, பெரியமேடு நேரு விளையாட்டரங்கில், தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாநில தடகள போட்டிகள் நடந்தன.
இதில், கிளப்புகள், அகாடமிகள், பள்ளிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 6 -- 12 மற்றும், 14 -- 20 வயது ஜூனியர் பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.
பல்வேறு துார ஓட்டப்பந்தயங்கள், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெற்றன.
அவற்றில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 'ஸ்டார்ம் அத்லெடிக் அகாடமி' வீரர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றனர். முகப்பேர் வேலம்மாள் வெஸ்ட் பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்தது.
வெற்றிபெற்ற அணிகளை, மாநில தடகள சங்க இணை செயலர் மோகன்பாபு, திருவள்ளூர் மாவட்ட தடகள சங்க தலைவர் சிவகுமார் பாராட்டி பரிசு வழங்கினர்.