/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில அளவில் விருது பெற்ற பெரியபுத்தேரி கூட்டுறவு சங்கம்
/
மாநில அளவில் விருது பெற்ற பெரியபுத்தேரி கூட்டுறவு சங்கம்
மாநில அளவில் விருது பெற்ற பெரியபுத்தேரி கூட்டுறவு சங்கம்
மாநில அளவில் விருது பெற்ற பெரியபுத்தேரி கூட்டுறவு சங்கம்
ADDED : நவ 24, 2024 12:43 AM

செங்கல்பட்டு:பெரியபுத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மாநில அளவில் விருது பெற்றது.
செங்கல்பட்டு அடுத்த பெரியபுத்தேரி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு, அனைத்து விவசாய கடன் பெறும் விவசாயிகள் 1,796 பேரும், நகை கடன் பெறுவோர், 5,186 பேர் என, மொத்தம் 6,982 உறுப்பினர்கள் உள்ளனர்.
இச்சங்கத்தில், 28 கோடி ரூபாய் வைப்பு நிதியாகவும், பயிர், தானிய கிடங்கு, மீன் வியாபாரம், வணிகம், மகளிர் சுயஉதவி, விதை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மானிய கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களுக்கு, 33 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கடன் பெற்றவர்களும், சங்கத்திற்கு முறையாக கடன் செலுத்தி வருகின்றனர். சிறப்பாக செயல்பட்டு இச்சங்கத்தை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செங்கல்பட்டு மாவட்ட மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவளார் நந்தகுமார், சென்னை கூட்டுறவுத் துறை பதிவாளருக்கு, கருத்துரு அனுப்பி வைத்தார்.
அதன்பின், மாநில அளவில் சிறந்த சங்கமாக, சென்னை கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சுப்பையன் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில், 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று, பெரியபுத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான விருதை, செயலர் சிவக்குமாரிடம் வழங்கினார்.
இந்த விருதுக்கான கேடயத்தை, கலெக்டர் அருண்ராஜிடம் காண்பித்து, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் சிவமலர், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நந்தகுமார், இணைப் பாதிவாளர் அலுவலக கணகாணிப்பாளர்கள் வேலு, வேணுகோபால் மற்றும் கூட்டுறவுத் துறையினர் நேற்று முன்தினம் வாழ்த்து பெற்றனர்.