/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில ஓவிய, சிற்பக் கண்காட்சி கலைப்படைப்புகள் வரவேற்பு
/
மாநில ஓவிய, சிற்பக் கண்காட்சி கலைப்படைப்புகள் வரவேற்பு
மாநில ஓவிய, சிற்பக் கண்காட்சி கலைப்படைப்புகள் வரவேற்பு
மாநில ஓவிய, சிற்பக் கண்காட்சி கலைப்படைப்புகள் வரவேற்பு
ADDED : நவ 15, 2024 08:10 PM
மாமல்லபுரம்:தமிழகத்தில், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட மரபு மற்றும் நவீன கலைகள் சிறந்து விளங்குகின்றன. அக்கலைஞர்களை ஊக்கப்படுத்த, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், ஆண்டுதோறும் போட்டி நடத்தி, சிறந்த கலைஞர்களுக்கு, பூம்புகார் விருது வழங்குகிறது.
மேலும், கலை, பண்பாட்டுத் துறையும், ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தி, சிறந்த படைப்பாளர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கி வருகிறது.
இத்துறை, 2024 - 25 மாநில அளவிலான கண்காட்சி நடத்த உள்ளது. இதில் பங்கேற்கும், மரபு, நவீன ஓவியக்கலை பிரிவில், 36 வயதிற்கு மேற்பட்ட மூத்த கலைஞர்கள் 15 பேரின் சிறந்த படைப்புகளுக்கு, தலா 20,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
அதேபோல், 35 வயதிற்குட்பட்ட இளைய கலைஞர்கள், 15 பேரின் சிறந்த படைப்புகளுக்கு, தலா 10,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மரபு, நவீன சிற்பக்கலை பிரிவில், 36 வயதிற்கு மேற்பட்ட மூத்த கலைஞர்கள், 15 பேரின் சிறந்த படைப்புகளுக்கு, தலா 20,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
அதேபோல், 35 வயதிற்குட்பட்ட இளைய கலைஞர்கள் 10 பேரின் சிறந்த படைப்புகளுக்கு, தலா 10,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மொத்தம் 50 கலைஞர்களுக்கு, 8 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
கண்காட்சியில் பங்கேற்க விரும்பும, தமிழக கலைஞர்கள், www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி, ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவற்றின் புகைப்படங்களுடன், வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அத்துறை அறிவித்துள்ளது.
விதிமுறைகள், விண்ணப்பித்தல் உள்ளிட்ட விபரங்களை, இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். அதேபோல், இயக்குனர், கலை மற்றும் பண்பாட்டு துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, சென்னை - 600 008 என்ற முகவரிக்கும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு, 044 - 2819 3195 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.