/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில டேபிள் டென்னிஸ் டான்பாஸ்கோ பள்ளி தகுதி
/
மாநில டேபிள் டென்னிஸ் டான்பாஸ்கோ பள்ளி தகுதி
ADDED : பிப் 09, 2025 12:34 AM
சென்னை, பள்ளிக் கல்வித்துறையின் வருவாய் மாவட்ட அளவிலான, 'யு - 14' டேபிள் டென்னிஸ் போட்டி, தி.நகர், ஜி.ஆர்.டி., பள்ளி வளாகத்தில் நடந்தது.
போட்டியில், சென்னை வருவாய் மாவட்ட அளவில், 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இறுதிப் போட்டியில், கொளத்துார், டான்பாஸ்கோ பள்ளி மற்றும் ராயபுரம் எம்.பி.எஸ்.இ., பள்ளி அணிகள் மோதின.
விறுவிறுப்பான ஆட்டத்தில், 11 - 9, 11 - 8 என்ற கணக்கில், டான்பாஸ்கோ பள்ளி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.
வெற்றி பெற்ற அணியை, கொளத்துார் டான்பாஸ்கோ பள்ளியின் தாளாளர், ராக் சின்னப்பா, உடற்கல்வி ஆசிரியர் ஜெஸ்டின் ஆகியோர் பாராட்டினர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற டான்பாஸ்கோ பள்ளி, இன்று முதல் தேனியில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

