/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உதவி கேட்பது போல நடித்து கார் ஓட்டுனரிடம் திருட்டு
/
உதவி கேட்பது போல நடித்து கார் ஓட்டுனரிடம் திருட்டு
உதவி கேட்பது போல நடித்து கார் ஓட்டுனரிடம் திருட்டு
உதவி கேட்பது போல நடித்து கார் ஓட்டுனரிடம் திருட்டு
ADDED : செப் 21, 2024 10:03 PM
மறைமலைநகர்:ராமநாதபுரம் மாவட்டம், வண்ணாங்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்மேகம், 23; கார் ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு 'பாரத் பென்ஸ்' காரில், மறைமலைநகர் வந்த கார்மேகம், ஜி.எஸ்.டி., சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பி விட்டு ஓய்வு எடுத்துள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் இரு குழந்தைகளுடன் வந்த நபர், தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. மேல்மருவத்தூர் வரை செல்ல வேண்டும் எனக் கூறி பணம் கேட்டுள்ளார்.
கார்மேகம் தன்னிடமிருந்த 200 ரூபாயை கொடுத்துள்ளார். இருசக்கர வாகனத்தில் இருந்த குழந்தை பசி எடுப்பதாக கூறியதால், கார்மேகம் தனது ஏ.டி.எம்., கார்டு மற்றும் எண்ணை அந்த நபரிடம் கூறி 500 ரூபாய் பணத்தை பெட்ரோல் பங்க் வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்தில் எடுத்து வர கூறினார்.
பணம் எடுத்து வர குழந்தைகளுடன் சென்ற நபர் மாயமான நிலையில், கார்மேகத்தின் மொபைல் எண்ணிற்கு 7,000 ரூபாய் ஏ.டி.எம்.,மில் எடுத்தாக குறுஞ்செய்தி வந்தது.
இதுகுறித்து கார்மேகம் காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.