/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடற்கரை கோவிலில் மழைநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை
/
கடற்கரை கோவிலில் மழைநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை
கடற்கரை கோவிலில் மழைநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை
கடற்கரை கோவிலில் மழைநீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை
ADDED : ஜன 27, 2025 11:17 PM

மாமல்லபுரம், மாமல்லபுரம் கடற்கரை கோவிலில், மழைநீர் தேங்காமல் தவிர்க்க, தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களில், கடற்கரை கோவில் குறிப்பிடத்தக்கது. இக்கோவில் சைவம், வைணவம் என, இரண்டு வழிபாட்டு சன்னிதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் துறை பாதுகாத்து பராமரிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, கலாசார அமைப்பு, கடந்த 1984ல், சர்வதேச பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
கோவில் வெளிபிரகார பகுதி, தற்போதைய நிலமட்டத்திற்கு கீழ் அமைந்துள்ளது. இதனால் கனமழையின்போது, மழைநீர் சூழ்ந்து, பல நாட்கள் தேங்கி, பயணியர் நடக்க சிரமப்படுகின்றனர்.
மழை ஓய்ந்ததும், தொல்லியல் துறை ஊழியர்கள் மோட்டார் பம்ப் வாயிலாக, மழைநீரை இரைத்து வெளியேற்றுவர். மழைநீர் தேங்காமல் தவிர்க்க, அத்துறை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து, தொல்லியல் பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதரன் கூறியதாவது:
மழைநீர் தேங்கும் இடத்திலிருந்து, உடனுக்குடன் நீர் வெளியேறும் வகையில், நிலத்தடியில் 500 மீட்டர் நீளத்திற்கு பிளாஸ்டிக் குழாய்கள், நீர் சேகரமாக மூன்று உறை கிணறுகள் ஆகியவை அமைக்கிறோம். குழாய் வாயிலாக மழைநீர் உடனுக்குடன் வெளியேறி, உறைகிணற்றில் சேகரமாகும். கிணற்று நீர் மோட்டார் பம்ப் வாயிலாக வெளியேற்றப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

