/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல் குவாரி லாரிகளால் விளங்காடு சாலை சேதம்
/
கல் குவாரி லாரிகளால் விளங்காடு சாலை சேதம்
ADDED : நவ 11, 2024 02:28 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த விளாங்காடு கிராமத்தில் இருந்து, போரூர் வழியாக நீர்பெயர் செல்லும், 2.5 கி.மீ., நீள தார் சாலை உள்ளது. இந்த சாலை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்த சாலையை, போரூர், நீர்பெயர், நீலமங்கலம், விளாங்காடு உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். சாலை, 2020ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது.
தினசரி ஏராளமான பொதுமக்கள் சாலையில் கடந்து செல்கின்றனர். கடந்த 4 மாதங்களாக, விளாங்காடு பகுதிக்கு தினசரி அதிகப்படியான கல் குவாரி லாரிகள் வந்து செல்கின்றன.
அதனால், சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்து உள்ளது. இதனால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.