/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நான்கு பேரை கடித்த தெருநாய்கள் தொழுப்பேடு ஊராட்சியில் அச்சம்
/
நான்கு பேரை கடித்த தெருநாய்கள் தொழுப்பேடு ஊராட்சியில் அச்சம்
நான்கு பேரை கடித்த தெருநாய்கள் தொழுப்பேடு ஊராட்சியில் அச்சம்
நான்கு பேரை கடித்த தெருநாய்கள் தொழுப்பேடு ஊராட்சியில் அச்சம்
ADDED : செப் 19, 2025 02:14 AM

அச்சிறுபாக்கம்:தொழுப்பேடு ஊராட்சியில், நான்கு பேரை தெருநாய்கள் கடித்ததால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொழுப்பேடு ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளன. இவை, பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி துரத்தி கடித்து வருகின்றன.
நாய்களிடம் இருந்து தப்பிக்க வேகமாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தடுமாறி விழுந்து காயமடை கின்றனர்.
அந்த வகையில், கடந்த ஒரு சில நாட்களில் தொழுப்பேடு ஊராட்சியில், தெருநாய்கள் கடித்து ஒரு சிறுவன், இரண்டு ஆண்கள், ஒரு பெண் உட்பட நான்கு பேர், அச்சிறுபாக்கம் மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே, மக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் மற்றும் அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.