/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பனையூர் சாலையில் மின்விளக்குகள் அவசியம்
/
பனையூர் சாலையில் மின்விளக்குகள் அவசியம்
ADDED : ஜூலை 22, 2025 12:10 AM
இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பனையூர் கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பனையூர் பெரியகுப்பத்திற்கு செல்லும் தார்ச்சாலை உள்ளது.
தினமும் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள் என, ஏராளமானோர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் பல ஆண்டுகளாக, மின்விளக்கு வசதி இல்லை. இதனால், இரவு நேரத்தில் சாலையில் விஷ பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.பனையூர் குப்பம் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பா.தினகரன், செய்யூர்.